Thursday, August 17, 2006

இஸ்ரேல் vs ஹெஸ்பொல்லா

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்து வந்த சண்டை ஓய்ந்து, UN தலையீட்டாலும் (US அனுமதித்ததாலும்!) தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து ஒரு பார்வை.

முதலில், இரண்டு ராணுவ வீரர்களை மீட்பதற்காக ஒரு நாடு போர் தொடுப்பது என்பது சற்று அதிகமானது ! மேலும், போரின் முடிவில் இஸ்ரேல் அவர்களை மீட்க முடிந்ததா என்பது தெரியவில்லை ! ஹெஸ்பொல்லாவினால் இஸ்ரேலுக்கு எந்தவித ஆபத்தும் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கூறிக் கொண்டு, இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகள், பல அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொண்டது அமைதி விரும்பும் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இதற்கு முன் இஸ்ரேல் நிகழ்த்திய போர்களூக்கு ஓரளவு நியாயமான காரணங்கள் இருந்தன. இப்போது நிச்சயம் கிடையாது ! எப்போதும் போல அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து அதில் குளிர் காய்ந்தது. எதேச்சாதிகார புஷ், எதிர்பார்த்தது போலவே, "இது அமைதிக்காக நடத்தப்படும் யுத்தம்" என்று இப்போரை வர்ணித்தார் ! இராக்கில் தங்களால் முழுமையாக செய்ய முடியாததை, லெபனானில் இஸ்ரேலாவது செய்யட்டுமே என்ற அமெரிக்க "நல்லெண்ணமும்" இதற்குக் காரணம் !

நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போர் பற்றிய செய்திகளை பொதுவாக புறக்கணித்ததாகவே தோன்றியது. "Breaking News" என்று போட்டு கவைக்குதவாத செய்திகளை மக்களுக்கு வழங்குவதே இவற்றின் தலையாய பணிகளில் ஒன்று ! செய்திகள் குறித்த ஆய்வு (Analysis) எனபது நடைபெறுவதில்லை. நாமும், கொட்டக் கொட்ட அவற்றைப் பார்க்கிறோம் !

ஹெஸ்பொல்லா நிகழ்த்திய ராக்கெட் தாக்குதல்களில், இஸ்ரேலின் வடக்குப்பகுதியான ஹை·பாவில் பொதுமக்கள் பலியாயினர். இஸ்ரேலுக்கும் இழப்பு தான் என்றாலும், இப்போரினால், இப்போது தான் பொருளாதார நிலை சற்றே சீரடைந்து வரும் லெபனானுக்கு, இழப்பு பலப்பல மடங்கு என்றே கூற வேண்டும். லெபனானின் பன்னாட்டு விமான நிலையம், பெட்ரோலிய ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல இடங்கள் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டன.

தம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அவல நிலையையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டாவது, ஹெஸ்பொல்லா சற்று முன்னதாகவே பேச்சு வார்த்தைக்கு வந்திருக்க வேண்டும். ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், அதி நவீன தொழில்நுட்பத் தடவாடங்களின் துணையுடன் வரும் இஸ்ரேலை, ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் கொண்டு எத்ர்த்துப் போரிட்டதால், லெபனானுக்கும், அதன் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளும், வலியும், மிக மிக அதிகம் ! ஆனால், தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது ! மேலும், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்பவர்கள் தானே !!!

போர் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொல்லாவிடம் இருக்கும் ராணுவத் தளவாடங்களை பறிமுதல் செய்யும்படி, லெபனான் நாட்டு ராணுவத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது உண்மை தான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நிலையில் லெபனான் ராணுவம் இருந்தது / இருக்கிறது என்பதும் உண்மையே ! இஸ்ரேலியத் தாகுதல்களால், லெபனானில், ஹெஸ்பொல்லா எதிர்ப்பாளர்கள் கூட பெருமளவு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் அரசு தற்போது பலமிழந்து, ஹெஸ்பொல்லா இயக்கம் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கு இப்போர் வழி செய்ததுடன், நிரந்தமான நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படக் கூடிய சூழலை பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளி விட்டது ! மிக நிச்சயமாக, இப்போர் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரவில்லை ! இதனால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் தான் அதிகம் !

போர் உச்சத்தில் இருந்தபோது, கோண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) இப்பிரச்சினையை, "ஒரு புது மத்திய கிழக்கு பிறக்கும் சமயம் ஏற்படும் பிரசவ வலி" என்று வர்ணித்தார் ! ஆனால், இந்த "புது மத்திய கிழக்கு" (இராக் போலவே!) அமெரிக்க நலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வல்லதாகவே தோன்றுகிறது !

பி.கு: ராக்கெட் மழை பொழிந்த ஹை·பாவுக்கு (Haifa) 2 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது சாதா மழை தான் பெய்தது ! கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேல் அமைந்த மலைப்பாங்கான, குளிர்ச்சியான, ரம்யமான ஊர் அது. பஹாயி (Bahaii) சமயத்தின் தலைமையிடமாகவும், பஹாயினரால் புனித பூமியாகவும் ஹை·பா கருதப்படுகிறது. அங்கே, என்னுடன் மிகுந்த நட்புடன் பழகிய இஸ்ரேலிய நண்பர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

18 மறுமொழிகள்:

CAPitalZ said...

"அன்று இஸ்லாம் மதத்தவர்கள் செய்த பாவத்தினால் தான் இன்று இஸ்ரேல் அந்த இடத்தில் இருந்து சுற்றியிருக்கும் இஸ்லாம் ஆக்கப்பட்ட நாடுகளுக்கு உவத்திரமாக இருக்கிறது."
http://1paarvai.wordpress.com/2006/08/15/isreal-lebenon-hezbollah-jewish-muslim/

வஜ்ரா said...

பாலா..சார்,

வேறு ஏதாவது ஒரு ஊரில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஞாயம் பேசுவது மிக எளிது...இஸ்ரேல் வாழும் பகுதி ஒரு volatile பகுதி...

இங்கே பேச்சுவார்த்தை என்றால் போருக்குப் பயந்த "அலி"ப்பயல் என்று பெயர் கிடைக்கும்...அது தான் அரபு வீரம்..!!

அடி வாங்கினால் தான் அவர்களுக்கு புத்திவரும்...அது வராமல் கூட போகும் என்பதற்கு ஹமாஸ், ஹெஸ்பல்லா மேலோங்குவது காரணம்...

When these people elect Terrorist who cannot be reasoned with, what do you expect a state which has to protect its soverignity and people has to do?

மத்தியகிழக்கில் இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கிடக்கும் சக்திகள் தான் அதிகம்...அது தான் Arab mentality.

நாம் அழகாகப் பேசலாம் அது செய்ரிஉக்கலாம், இது செய்திருக்கலாம் என்று....இஸ்ரேல் செய்தது தவறு தான்...அது இஸ்ரேலிலேயே எல்லோரும் சொல்வார்கள்..

உங்கள் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு உங்கள் வீட்டின் மேல் கல் எரிபவர்கள், வீட்டில் உள்ள பெண்களை சீண்டுபவர்களை வீடு புகுந்து அடிப்பீர்களா இல்லையா? அதே தான் இஸ்ரேல் செய்கிறது...செய்தது...செய்யும். அது அமேரிக்கா எதிர்த்தாலும் சரி. Israel will never negotiate with terrorist organizations.

இன்று அவர்கள் பேச்சுக்கு இணங்கி அவர்கள் கோரிக்கையை நிரைவேற்றினால் நாளை மேலும் சிவிலியன்கள் மில்லிடரி ஆபிர்சர்களை கடத்தி காரியம் சாதித்துக் கொள்வார்கள்..! இஸ்ரேல் வாழ முடியுமா இப்படி..?

enRenRum-anbudan.BALA said...

CAPital,
கருத்துக்கு நன்றி.
தங்கள் பதிவையும் வாசித்தேன் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா,
கருத்துக்களுக்கு நன்றி.
//
வேறு ஏதாவது ஒரு ஊரில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஞாயம் பேசுவது மிக எளிது...இஸ்ரேல் வாழும்
பகுதி ஒரு volatile பகுதி...
//
மொத்த நியாயத்தையும் அல்ல, இந்த ஒரு போரின் நியாயத்தைப் பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன் !
இஸ்ரேலின் பதட்டமான, ஆபத்தான சூழல் பற்றி தெரிந்தது தான். நான் அதை மறுக்கவில்லை. இப்போர் மேலும் சூழலை இஸ்ரேலுக்கு பாதகமாக்கி யுள்ளது என்கிறேன்.

யூத இனமும் பல கொடுமைகளை (genocide and mass annihilation) சந்தித்துள்ளது என்று வரலாறு
கூறுகிறது. இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டும் என்ற எண்ணம், சில தீவிரவாத
அமைப்புகளாலும் அவற்றை ஆதரிக்கும் சில மத்திய கிழக்கு அரசுகளாலும், விஷ விதையாக அப்பாவி மக்கள்
மனதில் தூவப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

எக்காலத்திலும், போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. போர் நிகழ்ந்த இடம் வன்முறை பூமியாக
மாறி, அவலமும், வலியும் தொடர்கின்றன. காஃசா பகுதியை விட்டு (இஸ்ரேலியர்களில் ஒரு சிறு
பகுதியினர் விரும்பா விட்டாலும்) இஸ்ரேல் விலகியதை ஒரு நல்ல தொடக்கமாகவே கண்டேன் ! ஆனால், இப்போது எல்லாம் தலை கீழ் !

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

CT,

Thanks for your comments.

// Bala your blog is like a sine curve.Comedy, social justice, politics,serious,
very serious and agin comedy
//
Pl. clarify if you are calling this post as 'Comedy' ?

//
two weeks later people are standing in the que to register their name to become
suicide bomber, there is a recruitment board for this.If you see the clip you will
see most of these people are kids of 17 and 18 years....
//
That is what I am telling, people are being misguided by false propaganda and
rhetoric of hatred !!!

//Amma paianuku first birthday vandhudunga marandhudama.Ada enna
bayandhutigala.Ennoda paianukunu solla vandhane
//
தங்கள் மகனின் நல்வாழ்வுக்கு என் ஆசிர்வாதங்களும், பிரார்த்தனைகளும். என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

CT,
Thanks for the clarification !

There was a misunderstanding from my side too !

Sorry for that.

And, thanks for taking time to read my post and commenting.

enRenRum anbudan
BALA

said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

Dear Muthu,

Answer to your question
***********************

I am not sure it is possible to change the URL of my blog (for the purpose of removing the "underscore" in my URL). It is not an issue to re-register in thamizmaNam, though.

I may lose all my blog content :(
May be, I could write to blogger.com and seek theri help in this regard.

Did you try %5F instead of "_" ? It has worked for some of my blog readers. Please give me your email ID (write to balaji_ammu@yahoo.com)

enRenRum anbudan
BALA

enRenRum-anbudan.BALA said...

Comment edited by administrator after removing the personal content as per the request of the reader
*****************************

Hi Bala
"Thanks for the clarification"
You are welcome SIR .I am glad you asked.
BTW: I asked my wife to read my comments.She said my english sucks and no wonder bala misunderstood.Yup I was the last but one in my english class.Guess who was last -....-....- it was GEORGE.W.BUSH

Thought writing in tamil , but I was the last in tamil class.In my fourth grade I wrote some thing like this
எங்கள் விடுதிக்கு மாவாட்ட ஆட்சி தலைவர் வந்தார்
instead of writing
"எங்கள் விடுதிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வந்தார் "

Hope atleast now you will accept I am appavi.......

" And, thanks for taking time to read my post and commenting."

தங்கள் இடத்தில் கருத்துப் பரிமாற இடம் கொடுத்ததற்கு __/\__ & நன்றி.

cheers (or solong )
-- CT

*******************

enRenRum-anbudan.BALA said...

************************
CT,
Thanks again ! Sorry for the misunderstanding ! Pl. keep reading my postings and commenting as and when you have the time. I will write to your email ID ASAP.
enRenRum anbudan
BALA
*********************

திருவடியான் said...

அது என்ன இஸ்ரேல் என்ற தேசம் ஒரு 500 வருடத்திற்கு முன்னமாவது உருவாகியிருக்குமா?

சோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து இடங்களை அபகரித்து இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. சரி.. ஒரு பழமையான இனம் நாடில்லாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கென்று ஒரு மண் வேண்டும். நியாயம் உள்ளது. இஸ்ரேல் உருவானது.

ஆனால் இன்றுவரை தனது வரைபடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ஆசையில் தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போகும் இஸ்ரேலின் போக்குதான் இன்றைய பிரச்னைக்குக் காரணம்.

இஸ்ரேலை பாலஸ்தீனும் பாலஸ்தீனை இஸ்ரேலும் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தல் தீர்வுக்கு முதல்படி.

இரண்டாவது, தனது எல்லைகளை அமெரிக்கா தவிர்த்த அமெரிக்கா ஆதரவற்ற ஒரு நாட்டின் தலைமையில் இரு நாடுகளும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதை பின்பற்ற வேண்டும்.

இது என்று நடக்குமோ அன்றுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

அது வரை அரபு தேசங்களில் எந்த நாடும் இஸ்ரேலுக்கு சிறிதளவாவது இணையான படைபலம் அடைந்து விடாதவாறு அமெரிக்கா பார்த்துக் கொள்ளும். உதாரணம் ஈராக் மேலும் "AXIS of EVIL"ன் ஆறு நாடுகள்.

enRenRum-anbudan.BALA said...

**********
திருவடியான்,
தங்கள் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன் ! தெளிவாக எழுதியுள்ளீர்கள், நண்பரே ! நன்றி, மீண்டும் வருக :)
என்றென்றும் அன்புடன்
பாலா
****************

வஜ்ரா said...

//
சோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து இடங்களை அபகரித்து இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. சரி.. ஒரு பழமையான இனம் நாடில்லாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கென்று ஒரு மண் வேண்டும். நியாயம் உள்ளது. இஸ்ரேல் உருவானது.

//

திருவடியான்...பாலஸ்தீன் என்கிற நாடே இருந்ததில்லை என்று சொல்கிறீர்களா?

ஜோர்டான், சிரியா, எகிப்து நாட்டிடமிருந்து நிலத்தை அபகரித்த இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனத்தீன் என்று தங்களை அழைத்திக் கொள்ளும் கூட்டத்திடம் தன் நிலத்தை பங்கிட்டுக் கொள்ளவேண்டும்?

Do not make self contradictory statements...

எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.. நிலத்தைப் பிரித்து இரண்டு நாடுகள் உருவாயின...அதை ஏற்காமல் இஸ்ரேலை அழிப்பதிலேயே குறியாய் இருக்கும் அரபு தேசத்தவர் செய்த சேட்டையில் உள்ளதையும் இழந்தவர்கள் பாலஸ்தீனர்கள்...

இன்று இஸ்ரேல் லெபனான் மீது போர் தொடுக்கவில்லை என்றால் ஹெஸ்பல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களை மேலும் கடத்தி சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகளை மீட்பர்...

உங்களுக்கு அமேரிக்கா பிடிக்கவில்லை என்பதற்காக இஸ்ரேல் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்று அமேரிக்க சொல்லக் கூடாது அல்லது அமேரிக்க ஆதரவு இருக்கக் கூடாது என்று கூறுவது அபத்தம்.

அரபுக்கள் இஸ்ரேலுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் லாபம் அவர்களுக்குத்தான்...

அல் கைதா தாக்குதலுக்கு முன்னால் சினாய் பகுதியில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து பணம் கொட்டியது இஸ்ரேலினால் தான்...அதே போல், ஹைபாவிலிருந்து பெய்ரூத்துக்கு ஒன்றும் அதிக தூரமில்லை 3-4 மணி நேர கார் பிரயாணத்தில் சென்றடையலாம்...லெபனான் ஹெஸ்பல்லா போன்ற தீவிரவாதிகளிடமிருந்து தன் நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்துக் கொண்டால் எண்ணைவளமில்லாத லெபனான் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மொய்த்து விடுவர்...!!

அரபுகளின் Anti-semitism தான் பிரச்சனை. அதை என்று அவர்கள் உணர்ந்து மறக்கிறார்களோ அன்று தான் தீர்வு....அமேரிக்கா மட்டுமில்லை. அமேரிக்க ஆதரவு இல்லாத நாடு உள்ளே நுளைந்தால் தங்கள் சாதகமான முடிவு எதுவோ அதை நோக்கி பிரச்சனையை திசை திருப்புவர்...

எந்த நாடும் நடு நிலை நாடு அல்ல...

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா ஷங்கர், CT,

நன்றி !

திருவடியான் said...

Mazel Tov, வஜ்ரா சங்கர் & CT,

பிற நாடுகளில் அபகரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். Thanks.

இஸ்ரேல் என்றழைக்கபடும் அந்த நிலப்பரப்பில் இன்னொரு இனமும் இருந்து வந்தது. அதுதான் பாலஸ்தீனியர்கள். பாலஸ்தீனியர்கள் தங்களை அரபுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. தாங்கள் தனி இனம் என்றே தம்மை வேறுபடுத்திக் காணுகின்றனர். பாலஸ்தீனியர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் இல்லை. அவர்களில் கிறித்துவர்களும் இருக்கிறார்கள். ட்ருஸ் என்று அழைக்கப்படும் இனத்தவரும் இருக்கின்றனர். இதுவரை நடந்த தற்கொலைத்தாக்குதல்களில் ஒரு கிறித்துவப் பெண்மணியும் உண்டு என்றால் ஆச்சரியமாக இல்லை.

ஆனால் அதுதான் உண்மை. இது மதத்தீவிரவாதம் அல்ல. இன விடுதலைப் போராட்டம். ஈழமக்கள் போராடுவதற்கும் அதற்கும் வித்தியாஸமில்லை.

ஆனால், இஸ்ரேலின் இனவாத, தீவிரவாத அரசு இதை முஸ்லிம்களின் பிரச்னையாக முன் வைக்கிறது. இஸ்ரேலினால் பாதிக்கப்பட்ட பிற நாடுகள் அரபுநாடுகளாகும். ஆகையால் அரபுக்கள் தங்களாலான உதவிகளை பாலஸ்தீன் என்னும் இனத்திற்கு செய்து வருகின்றனர். இது எப்படி என்றால், பாகிஸ்தான் சிங்களர்க்கு உதவுவது போல், அதாவது இந்தியாவிற்கு இடைஞ்சல் தர இலங்கைக்கு உதவுவது.. அதுபோல.

ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களின் தீவிர இஸ்ரேல் ஆதரவுநிலை போல நான் பாலஸ்தீனுக்கோ அரபுதேசத்திற்கோ ஆதரவாளனில்லை. தீவிரவாதம் கூடாது என்பதில் ஆணித்தரமான பிடிப்புள்ளவன். அதேசமயம் தீவிரவாதம் தூண்டுகின்ற நாடுகளை அவற்றிற்கு உதவுகிற நாடுகளை எதிர்த்து விமர்சனம் செய்ய தயங்குவதில்லை.

மனிதக் கேடயம் பற்றிப் பேசியிருக்கிறார், CT. அர்பன் வார்ஃபேர் (Urban Warfare) எனப்படும் புதுமுறை கொரில்லாத் தாக்குதலில் இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கள் வெகு சகஜம். விடுதலைப்புலிகளை இப்பொழுதும் இலங்கை அரசு மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு வைக்கிறது. தங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கும் போது பயங்கரவாத அரசுகள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு அது.

இத்தனை பொதுமக்கள் இறந்தபோது அத்தனை அளவு, ஏன் பத்துக்கு ஒன்று என்று கூட ஹெஸ்பொல்லாக்கள் இறக்கவில்லையே... இது என்ன மனிதக்கேடயக் கணக்கு..? ஊடகங்கள் இஸ்ரேல் கையில் இருக்கும் வரை இந்தமாதிரியான அச்சடித்த பொய்களை எல்லோரும் படிக்க வேண்டியதிருக்கும்.

மேலும் CT அவர்கள் தேவையில்லாமல் இஸரேல் பாலஸ்தீனிய பிரச்னையில் காஷ்மீரி பண்டிட்களை இழுத்திருக்கிறார். காஷ்மீர் பிரச்னை வேறு விதம். இதை நீங்கள் ஒரு பாகிஸ்தானியரிடம் போய் விவாதம் செய்யவேண்டும், ஒரு இந்தியனிடமல்ல. இந்தியர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் இந்திய அரசின் பின் நிற்கிறார்கள். இதில் அரசின் கொள்கைக்கு மாறாக யார் நடந்தாலும் அவர் தேசத்துரோகி ஆவார்.

ஆனால்.. இந்தியனாகப்பிறந்து விட்டு வேறு நாட்டின் உளவுத்துறைகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைசெய்பவர்களுக்கு எந்தப் பெயர் கொடுப்பது என்றுதான் தெரியவில்லை.

dondu(#11168674346665545885) said...

"பிற நாடுகளில் அபகரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். Thanks."
என்ன உளறல். 1948-ல் மூன்றில் இரண்டு என்ற வாக்குபொ பெரும்பான்மையில் உருவானவை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம். அதில் இஸ்ரேல் தனக்களிக்கப்பட்டை நிலப்பரப்பில் ஆட்சி புரிய இஸ்ரேலையே அழிக்கும் ஆசையில் சுற்றிலிருக்கும் அரேபிய தேசங்களின் வார்த்தையில் மயங்கி தன்னிடத்தை விட்டு தானே அகன்று அகதியானவர் பாலஸ்தீனியர். அவர்களைக்கப்பட்ட நிலப்பரப்பை எகிப்தும் ஜோர்டானும் பங்கு போட்டுக் கொண்டதுதான் நிஜம். 1948 முதல் 1967 வரை அதுதான் நிலைமை.

1967-ல் மறுபடி இஸ்ரேலை அழிக்க நடந்த சதியை முறியடித்து இஸ்ரேல் அவர்களை ஓட ஓட விரட்டியது.

இப்போத்து குய்யோ முறையோ எனக் கத்தி ஒரு பயனுமல்ல.

"இந்தியர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் இந்திய அரசின் பின் நிற்கிறார்கள். இதில் அரசின் கொள்கைக்கு மாறாக யார் நடந்தாலும் அவர் தேசத்துரோகி ஆவார்.
இந்தியனாகப்பிறந்து விட்டு வேறு நாட்டின் உளவுத்துறைகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைசெய்பவர்களுக்கு எந்தப் பெயர் கொடுப்பது என்றுதான் தெரியவில்லை."
இந்தியக்குடிமகன்களாக இருந்து கொண்டு இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது பாகிஸ்தான் ஜெயித்தால் மிட்டாய் கொடுத்து சந்தோஷப்படும் கோஷ்டிகளிடம் போய் இதைக் கூறவும். பாலஸ்தீன உளவுத்துறையில் பணி புரிபவர்கள், அவர்களது தீவிரவாத செயல்களுக்கு சப்பை கட்டும் கொபசெக்களிடம் இதை கூறவும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

திருவடியான்,

its a rhetoric question...தவறாகப் புரிந்து கொண்டு மசால் தோவ் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும், Toda Rabbah! :D

//
பாலஸ்தீனியர்கள் தங்களை அரபுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. தாங்கள் தனி இனம் என்றே தம்மை வேறுபடுத்திக் காணுகின்றனர்.
//

இது எனக்குப் புது தகவல். இதுவரை பாலஸ்தீனியர்கள் அரபு மக்கள் (arabs) என்று தான் நினைத்திருந்தேன். அனேகமாக அராபத்துக்கோ, அல்லது ஹமாஸ் தலைவர்களுக்கோ, அல்லது அபு மாஸென் (மொஹம்மத் அப்பாஸ்) க்குக் கூட இது புதிய தகவல் என்றே நான் நினைக்கிறேன்.

//
இது மதத்தீவிரவாதம் அல்ல. இன விடுதலைப் போராட்டம். ஈழமக்கள் போராடுவதற்கும் அதற்கும் வித்தியாஸமில்லை.
//

Totally wrong.
ஒரு கிறுத்தவப் பெண் இருக்கிறாள் என்பதற்காக இது மதத் தீவிரவாதம் அல்ல என்பது..சுத்த அபத்தம். உங்களுக்கு ஈழத்தவர் மேல் ஏதேனும் வெறுப்பு உள்ளதா..அவர்களையும் பாலஸ்தீனர்களையும் இப்படி முடிச்சு போட்டு என்ன இலாபம்?

ஈழத்தவர் கேட்பது ஈழ நாடு, இலங்கையின் அழிவு அல்ல!!

பாலஸ்தீனர் மற்றும் அரபு தேசத்தவர் கேட்பது இஸ்ரேலின் அழிவு. பாலஸ்தீன் நாடு வேண்டும் என்று கேட்பது அவர்கள் போராட்டத்திற்கான போர்வை.

..
உங்களின் தீவிர இஸ்ரேல் ஆதரவுநிலை போல நான் பாலஸ்தீனுக்கோ அரபுதேசத்திற்கோ ஆதரவாளனில்லை. தீவிரவாதம் கூடாது என்பதில் ஆணித்தரமான பிடிப்புள்ளவன்.
..

நான் தீவிர இஸ்ரேல் ஆதரவாளன் அல்ல.

இஸ்ரேல் செய்யும் செயல்கள் பல அனியாமானவை தான். அதை நான் மறுப்பது இல்லை. அது அவர்கள் பிரச்சனை. அதில் ஞாய தர்மம் சொல்ல நான் யார். நான் கேட்பது எல்லாம், அரபு தீவிரவாதம் (அல்லது இஸ்லாமிய தீவிரவாதம்) இஸ்ரேலை அழிக்க நினைப்பது பற்றித்தான்...

..
ஊடகங்கள் இஸ்ரேல் கையில் இருக்கும் வரை இந்தமாதிரியான அச்சடித்த பொய்களை எல்லோரும் படிக்க வேண்டியதிருக்கும்.
..

எந்த ஊடகங்கள் இஸ்ரேல் கையில் உள்ளது. ? நீங்கள் இஸ்ரேல் பற்றி படிக்கும் செய்திகள் கூட ஊடகங்களிலிருந்து தானே, அல்லது உங்களுக்கு ஏதேனும் Special report அனுப்பப் படுகின்றதா...?

..
இந்தியனாகப்பிறந்து விட்டு வேறு நாட்டின் உளவுத்துறைகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைசெய்பவர்களுக்கு எந்தப் பெயர் கொடுப்பது என்றுதான் தெரியவில்லை.
..

இந்த மனோபாவத்தில் இருப்பவருடன் பேசி பிரயோசனம் இல்லை.
இதையே நான் உங்களுக்கும் கேட்கலாம்...இந்தியனாகப் பிறந்து விட்டு பாழாய்ப் போன அரபு தேசத்தவர் கொடுக்கும் காசுக்கு விசுவாசமாக இருந்தும், ரஷியா போட்ட (மிட்ரீகீன் ஆர்கைவ்) பிச்சையில் வாழ்ந்தவர்கள் என்று? தகுமா?

எல்லோரும் ஒரு நிலைப்பாடு எடுப்பதற்கு உளவுத்துரையில் சமபளம் வாங்குகின்றான் என்ற குற்றச்சாட்டு வைப்பது அர்த்தமில்லாத விவாத திசை திருப்பல் Blunt and baseless allegation.

//
இத்தனை பொதுமக்கள் இறந்தபோது அத்தனை அளவு, ஏன் பத்துக்கு ஒன்று என்று கூட ஹெஸ்பொல்லாக்கள் இறக்கவில்லையே... இது என்ன மனிதக்கேடயக் கணக்கு..?
//

ஹெஸ்பல்லா என்ன நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டா போராட்டுகின்றான்...? இறந்தவர் ஹெஸ்பல்லா அல்ல புது ஜனம் என்று வித்தியாசப்படுத்துவதற்கு?

ஹெஸ்பல்லாக்கள் ஆர்மி யூனிபார்ம் கூட இல்லாமல் பொது ஜன (சிவிலியன்) உடைகளில் பீரங்கிகள், ஏவுகணைகள் இயக்குகின்றனர்!! அதை படத்துடன் இந்த என் பதிவில் காட்டியிருக்கிறேன்.

தகுந்தார் போல் international herald tribune ல் வந்த இந்த கார்டூன் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

enRenRum-anbudan.BALA said...

திருவடியான், VajrA, Dondu Sir,

Thanks for sharing your thoughts.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails